என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்
நீங்கள் தேடியது "ஆஸ்திரேலியா ஓபன் பேட்மிண்டன்"
ஆஸ்திரேலிய ஓபனில் முன்னணி வீரர்களான ஜான் இஸ்னெர், எட்மண்ட் முதல் சுற்றோடு ஏமாற்றமடைந்து வெளியேறினார்கள். #AUSOpen
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் இன்று தொடங்கியது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டம் ஒன்றில் 9-ம் நிலை வீரரான அமெரிக்காவின் ஜான் இஸ்னெர் சக நாட்டு வீரரான ரெய்லி ஒபெல்காவை எதிர்கொண்டார்.
இதில் இஸ்னெருக்கு ஒபெல்கா கடும் சவாலாக விளங்கினார். முதல் செட் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7 (7) - 6(4) என முதல் செட்டை கைப்பற்றினார்.
2-வது செட்டிலும் இருவரும் 6-6 என சமநிலை பெற்றனர். இதனால் ‘டை பிரேக்கர்’ கடைபிடிக்கப்பட்டது. இறுதியில் ஒபெல்கா 7(8) - 6(6) என ஒபெல்கா கைப்பற்றினார்.
எட்மண்ட்
3-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. ஆனால் இந்த முறை இஸ்னெர் (7)7 - 6(4) என 3-வது செட்டை கைப்பற்றினார். 4-வது செட்டும் ‘டை பிரேக்கர்’ வரை சென்றது. இறுதியில் ஒபெல்கா 7(7) - 6 (5) என கைப்பற்றினார்.
2 மணி நேரம் 58 நிமிடங்கள் போராடி இஸ்னெர் 6(4) - 7(7), 6(6) - 7(8), 7(7) - 6(4), 6(5) - 7(7) எனத் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 13-ம் நிலை வீரரான கைல் பெர்டிச்சை எதிர்கொண்டார். இதில் எட்மிண்ட் 3-6, 0-6, 5-7 என நேர்செட் கணக்கில் தோல்வியடைந்தார்.

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் ரபேல் நடால், ஷரபோவா முதல் சுற்றில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். #AUSOpen
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மெல்போர்னில் இன்று தொடங்கியது. உலகின் இரண்டாம் நிலை வீரரும், 2009-ம் ஆண்டு சாம்பியனுமான ரபேல் நடால் (ஸ்பெயின்) முதல் சுற்றில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டக்வொர்த்தை எதிர்கொண்டார். இதில் நடால் 6-4, 6-3, 7-5 என்ற நேர்செட் கணக்கில் வென்று 2-வது சுற்று முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் 5-ம் நிலை வீரரான கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) 6-3, 5-7, 6-2, 6-1 என்ற கணக்கில் அட்ரியன் மனோரியாவை (பிரான்ஸ்) வீழ்த்தினார். டிமிட்ரோவ் (பல்கேரியா) வெர்ட்ஸ்கோவா (ஸ்பெயின்) ஆகியோர் முதல் சுற்றில் வென்று 2-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
2008 சாம்பியனும், தரவரிசையில் 30-வது இடத்தில் இருப்பவருமான ரஷிய வீராங்கனை மரியா ஷரபோவா தொடக்க சுற்றில் இங்கிலாந்தை சேர்ந்த ஹேரியட் டார்ட்டை எதிர்கொண்டார். இதில் ஷரபோவா 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வென்றார். 5-வது வரிசையில் இருப்பவரான ஸ்டீபன்ஸ் (அமெரிக்கா) 6-4, 6-2 என்ற நேர்செட் கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த டெய்லர் டவுன்சென்டை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற ஆட்டங்களில் கார்சியா (பிரான்ஸ்) ஆர்யனா (பெலாரஸ்) ஆகியோர் வெற்றி பெற்றனர். 14-வது வரிசையில் இருக்கும் ஜூலியா கோஜர்ஸ் (ஜெர்மனி) முதல் சுற்றிலேயே வெளியேறினார். அவர் 6-2, 6-7 (5-7), 4-6 என்ற கணக்கில் அமெரிக்க வீராங்கனை கோலின்சிடம் வீழ்ந்தார்.

ஆஸ்திரேலிய ஓபனில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் முதல் சுற்றில் அமெரிக்க வீரரிடம் நேர்செட்டில் தோல்வியடைந்து வெளியேறினார். #AUSOpen
கிராண்ட் சிலாம் டென்னிஸ் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் இன்று தொடங்கியது. முதல் சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் அமெரிக்காவின் பிரான்சிஸ் தியாஃபோவை எதிர்கொண்டார்.
இதில் முதல் சுற்றை பிரஜ்னேஷ் 6-7 என இழந்தார். 2-வது மற்றும் 3-வது செட்டையும் 3-6, 3-6 என இழந்தார். இதனால் நெர்செட் கணக்கில் தோல்வியடைந்து முதல் சுற்றோடு வெளியேறினார்.

செரீனா வில்லியம்ஸ் ஆஸ்திரேலிய கிராண்ட் சிலாம் பட்டத்தை வென்று உலக சாதனையை சமன் செய்வாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Serena
இந்த ஆண்டின் முதல் கிராண்ட் சிலாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்போர்ன் நகரில் நாளை (14-ந்தேதி) தொடங்குகிறது.
ஜோகோவிச் (செர்பியா), ரபேல் நடால் (ஸ்பெயின்), ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), அலெக்சாண்டர் சுவரேவ் (ஜெர்மனி), சிலிச் (குரோஷியா), கெவின் ஆண்டர்சன் (தென் ஆப்பிரிக்கா), டொமினிக் தியெம் (ஆஸ்திரியா), நிஷிகோரி (ஜப்பான்) போன்ற முன்னணி வீரர்கள் இதில் விளையாடுகிறார்கள்.
பெடரர், நடால், ஜோகோவிச், முர்ரே ஆகியோர் பட்டம் வெல்லும் வாய்ப்பில் முன்னிலையில் உள்ளனர். இந்த 4 பேரும் சேர்ந்து கடந்த 55 கிராண்ட் சிலாம் போட்டிகளில் (2015 பிரெஞ்ச் ஓபனில் இருந்து) 50 பட்டங்களை வென்று முத்திரை பதித்துள்ளனர்.
இவர்களின் ஆதிக்கம் இந்த ஆண்டிலும் நீடிக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த தலைமுறையில் உள்ள வீரர்கள் இந்த ஆண்டில் சாதிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
கடந்த ஆண்டில் ஜோகோவிச் அமெரிக்க ஓபன், விம்பிள்டன் பட்டத்தையும், ரபெல் நடால் பிரெஞ்சு ஓபன் பட்டத்தையும் ரோஜர் பெடரர் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் கைப்பற்றி இருந்தனர்.
பெண்கள் பிரிவில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் பங்கேற்கிறார். குழந்தை பெற்றதால் கடந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ளவில்லை. அமெரிக்கா ஓபனில் கலந்து கொண்டு விளையாடினார். இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து சாம்பியன் பட்டத்தை தவறவிட்டார்.
தற்போது வரை செரீனா 23 கிராண்ட் சிலாம் பட்டங்கள் வென்றுள்ளார். இன்னும் ஒரு பதக்கம் வென்றால் அதிக கிராண்ட் சிலாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற சாதனையை மார்கரெட் உடன் பகிர்ந்து கொள்வார். இதனால் செரீனா 24-வது கிராண்ட் சிலாம் பட்டம் வென்று புதிய வரலாறு படைப்பாரா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

×

X